மதுரை மாநகர் கீழமாசி வீதி மொட்டை விநாயகர் கோவில் எதிரில் சாலையின் நடுவே அமைந்திருக்கும் பாதாள சாக்கடை மூடி பல வாரங்களாக உடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?