சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-29 12:42 GMT

ஆடராவிளை சந்திப்பில் இருந்து மேல ஆடராவிளை, வருக்கதட்டு, சட்டுவன்தோப்பு வழியாக எள்ளுவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சீரமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. பின்னர், சாலை சீரமைப்பு பணி கடந்த 20 நாட்களாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி-கல்லூரி மாணவ,மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து சீரமைப்பார்களைா?.

-முத்துக்குமார்,ஆடராவிளை.

மேலும் செய்திகள்