சாலையோர குழியால் ஆபத்து

Update: 2024-09-15 13:24 GMT

 சாலையோர குழியால் ஆபத்து

திருப்பூர் கருமாரம்பாளையம் தனியார் மருத்துவமனை செல்லும் சாலையில் ஓரமாக பயங்கரமாக குழி உள்ளது. இந்த குழி இருப்பதை வாகன ஓட்டிகள் கவனிக்க வாய்ப்பு இல்லை. மிக அருகாமையில் வரும்போதுதான் குழி இருப்பதும் தெரியவரும்.இந்த குழிக்குள் வாகனங்கள் விழுந்தால் அதன் விளைவு நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. எனவே இந்த குழியை உடனே மூட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிராஜூதீன், கருமாரம்பாளையம்

8798757598

மேலும் செய்திகள்