புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு பணிக்கன் குடியிருப்பு மற்றும் மாலையணிந்தான் குடியிருப்பு ஆகிய ஊர்களை இணைக்கும் கால்வாய் கரையில் உள்ள சாலை கான்கிரீட் சாலையாக மாற்ற பணிகள் நடந்தது. ஆனால், அந்த பணி முழுமையடையாமல் பாதியில் கிடப்பில் போடப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்கி விரைந்து முடித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யுவராஜா, தெற்கு பணிக்கன்குடியிருப்பு.