வேகத்தடை தேவை

Update: 2024-09-15 07:45 GMT

அகஸ்தீஸ்வரம்-கொட்டாரம் நெடுஞ்சாலையும், மாடுகட்டி விளையில் இருந்து வரும் சாலையும் தெற்கு வடுகன்பற்று முத்தாரம்மன் கோவில் பகுதியில் சந்திக்கின்றன. இந்த சந்திப்பின் கிழக்கு மற்றும் வடக்கு பக்கமாக புதிதாக மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால், மாடுகட்டிவிளையில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சந்திப்பில் விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பின் கிழக்கு புறமாக வேகத்தடை அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்