காஞ்சீபுரம் மாவட்டம், கன்னடியன்குடிசை கிராமம் பகுதியில் 3 சாலைகள் இணையும் கூட்டுசாலை உள்ளது. இந்த சாலையில் வளையும் பகுதியில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மிகவும் அவதிஅடைகின்றனர். மேலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.