விழுப்புரம் அருகே வாணியம்பாளையத்தில் சென்னை-கும்பகோணம் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?