நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் தோவாளை உள்ளது. இந்த சாலையில் வலதுபுறத்தில் பிரபலமான தோவாளை பூ மார்க்கெட் உள்ளது. மேலும் அந்த பகுதியில் திருமண மண்டபம், மின்வாரிய அலுவலகம், அரசு பள்ளி உள்ளன. இதனால், இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த மார்க்கெட்டில் பூக்களை வாங்க வரும் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பூ மார்க்கெட் முன்பு சாலையில் வேகத்தடை அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.