நிலக்கோட்டை தாலுகா கருப்பமுப்பன்பட்டியில் இருந்து பூவம்பட்டி செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் மழைக்காலத்தில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.