வேப்பனப்பள்ளி தாலுகா நடுவனப்பள்ளி ஊராட்சி மாதேப்பள்ளி முதல் மேலூர் கொல்லக்கொட்டாய் வரை உள்ள இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சிறிய அளவில் மழை பெய்தால் கூட தண்ணீர் சாலையில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் சிறுசிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.