குண்டும், குழியுமான சாலை

Update: 2024-08-25 16:25 GMT

மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் மற்றும் வானமாமலை நகர் நுழைவாயில் முதல் பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் லேசான மழை பெய்தாலும் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை பழுது பாரக்க வேணடும்.


மேலும் செய்திகள்