ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகே கீழக்கரை செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால் பல மாதங்களாக திறக்கப்படாமல் பாலம் கிடப்பில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு பாலத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.