ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தளிர்மருங்கூர் தெற்கு குடியிருப்பு பாகனவயல் வழியாக தொண்டி- மதுரை செல்லும் இணைப்பு சாலை உள்ளது. மதுரைக்கு செல்லும் இந்த முக்கிய சாலையில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இச்சாலை நீண்ட நாட்களாக முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அதிகாரிகள் சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.