புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா மாங்காட்டில் இருந்து நகரம் வரை செல்லும் தார் சாலையானது ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி தருவதோடு, மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.