கரடு,முரடான சாலை

Update: 2024-08-25 10:05 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம்,கற்பகநாதர்குளம், காடுவெட்டி, ராஜபள்ளம், மணல்மேடுதெரு செல்லும் சாலை சேதமடைந்து இருக்கிறது. சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காட்சி அளிக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இருக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்