சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் கொங்கணாபுரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நான்கு ரோடு பிரிவு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைந்துள்ளது. இந்த ரவுண்டானாவின் சாலை மற்றும் சாலையோரம் ஒளிரும் விளக்குகள், பட்டைகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மின் நிறுத்தம் ஏற்படும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரவுண்டானாவில் எல்லை கோடுகளிலும், தரைதளத்திலும் எச்சரிக்கை ஒளிரும் விளக்குகள், பட்டைகள் பொருத்தி கொடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சசிகுமார், தாரமங்கலம்.