மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் கப்பூர் கிராமத்தில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புக்கம்பிகள் சேதமடைந்து உள்ளது. மேலும், பாலத்தை ஒட்டியுள்ள சாலை பெயர்ந்து பெரிய பள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் பாலத்தின் வழியாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலத்தையும், சாலையையும் சீரமைக்க வேண்டும்.