கரூர் மாவட்டம், மின்னம்பள்ளி பஞ்சமதேவி ஊராட்சி அமிர்த நகர் செல்லும் சாலை பணி கிடப்பில் போட்டப்பட்டது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடித்து, புதிய தார் சாலை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.