விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.ஆர்.கே.ஆர்.ரோடு, புது ரோடு, சாத்தூர் ரோடு,தட்டுமேட்டுத் தெரு ஆகிய நான்கு ரோடுகளும் சந்திக்கும் பகுதியில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்த சாலையை கடக்க பெரிதும் அச்சமடைந்து வருகினறனர். எனவே பொதுமக்களின் அச்சத்தை போக்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.