கம்பத்தில் இருந்து வீரப்பன்நாயக்கன் குளம் வழியாக நாராயணத்தேவன்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.