ஓமலூர்-தர்மபுரி செல்லும் வழியில் தொப்பூர் டோல் கேட் உள்ளது. இந்த பகுதியில் பிரதான சாலை மலை பகுதியோரம் அமைந்துள்ளது. மேலும் இந்த வழித்தடத்தில் இரவு நேரங்களில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலையோரம் தடுப்பு கம்பிகள், ஒளிரும் பட்டைகள் இல்லாததே காரணம் என்கின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் அவசியம் தடுப்பு கம்பிகள், ஒளிரும் பட்டைகள் அமைத்து தர வேண்டும்.