ராமநாதபுரம் மாவட்டம், மதுரையில் இருந்து ராமேசுவரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 49, பரமக்குடி வரை நான்கு வழி பாதையாகவும், அதன்பின் ராமேஸ்வரம் வரை இருவழி பாதையாகவும் உள்ளது. இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி நீண்ட நாட்களாகியும் நிறைவடையாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.