செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ராமகிருஷ்ணா நகரில் உள்ள கண்ணகி சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்கள் இந்த சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கிவிடுவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.