சீரமைக்கப்படுமா?

Update: 2024-08-11 07:39 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு தண்ணீர் குழாய் பதிக்கப்பட்டன. அதன்பிறகும் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்