நத்தம் அருகே கொசவன்குட்டு கிராமத்தில் உள்ள பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கும் போது, மேடு-பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.