விக்கிரவாண்டி தாலுகா வீரமூர், கக்கனூர், புதூர், அத்தியூர் திருக்கை, வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, செம்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?