திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மேலராதாநல்லூர் பகுதியில் அத்திக்கடை செல்வதற்காகா சாலை பராமரிபில்லாமல் இருக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண்பாதை போல காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சாலையில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்