கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள பாலத்துறையையொட்டி வாய்கால் வழியாக செல்லும் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.