விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் சாலை பலத்த சேதமடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு புதிதாக தார் சாலை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.