கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் இருந்து சர்ச் ரோடு செல்லும் சாலை ஏற்கனவே பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் கற்கள் சிதறி ஆங்காங்கே கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.