கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி குட்டக்கடை முதல் தாதம்பாளையம் வரை உள்ள தார்சாலை போடப்பட்டு 20 ஆண்டுகள் ஆவதால் தற்போது இந்த சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.