சேதமடைந்த சாலை

Update: 2024-07-14 16:45 GMT

திண்டுக்கல் அருகே மொட்டையகவுண்டன்பட்டியில் இருந்து வேம்பார்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. மேலும் கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுமட்டுமின்றி சாலையில் பொதுமக்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்