தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகம் சந்திப்பு முதல் வாஞ்சிநாதன் சிலை வரையிலும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. செங்கோட்டை காலாங்கரை மின்வாரிய அலுவலகம் அருகில், சுரண்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.