கோவை ரெயில் நிலைய சாலையோரத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோக்கள், டாக்சிகள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே அங்கு ஆட்டோக்கள், டாக்சிகளை நிறுத்தி போதிய வசதி ஏற்படுத்தி போக்குவரத்து இடையூறை சரி செய்ய வேண்டும்.