வடமதுரை அருகே வடுகப்பட்டியில் இருந்து அய்யலூர் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.