குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-30 17:18 GMT

வேடசந்தூர் அருகே காசிபாளையத்தில் இருந்து எல்லப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. மேலும் சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும் போது சாலையில் கிடக்கும் கற்கள், நடந்து செல்லும் பொதுமக்கள் மீது பட்டு காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்