செஞ்சி அருகே கொங்கரப்பட்டில் இருந்து வல்லம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.