ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கீழ் கைகாட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள சாலையானது மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. அதோடு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதமும் நிகழ்கிறது. எனவே அந்த சாலையை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.