சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-30 10:54 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா 54 நெம்மேலி பகுதியில் மன்னார்குடி-54 நெம்மேலி சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையின் இருபுறத்திலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கருவேல மரங்களால் சாலை வளைவுகளில் வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அப்பகுதியில் சிறு,சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கவும், கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்