வாறுதட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து தோப்பு வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குழிவிளை, அதங்கோடு, படந்தாலுமூடு, களியக்காவிளை, குழித்துறை செல்லும் சாலைகளுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜிகுமார், செம்மான்விளை.