பாலக்கோடு தாலுகா சோமனஅள்ளி அருகே கம்மாளப்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதி சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.