சிவகங்கை மாவட்டம் ஓக்குபட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.