தர்மபுரி- சேலம் சாலையில் பாரதிபுரம் பகுதியில் சாலையின் 2 புறங்களிலும் புதிய வேகத்தடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வேகத்தடைகள் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரியாததால் வேகமாக வரும் வாகனங்கள் அதே வேகத்தில் வேகத்தடையை கடக்கும் போது நிலைதடுமாறும் சூழல் ஏற்படுகிறது. இதனால் இந்த வேகத்தடை அமைந்துள்ள இடங்களில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே இந்த புதிய வேகத்தடை இருக்கும் பகுதியில் சாலையில் ஒளிரும் பட்டைகள் அமைக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும்.