விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா அழகாபுரி பஸ் நிலைய சந்திப்பில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.