குளச்சல் பாம்பூரி வாய்க்கால் வெள்ளமணல் பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் வெள்ளியாகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் உள்ள ஆற்றின் கரையின் பக்கவாட்டு சுவரில் அரிப்பு ஏற்பட்ட சாலை சேதமடைந்துள்ளது. இதனால் நரிக்கல் பகுதியில் இருந்து வெள்ளியாகுளம் செல்லும் சாலை பொதுமக்களும், இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி ஆற்றின் பக்கவாட்டு சுவரை கட்டுவதுடன், சாலையையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபாகரன், குளச்சல்.