குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-09 16:48 GMT

நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சி குளத்துப்பட்டியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலத்தில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மேடு, பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்