பிரம்மதேசம் அடுத்த முருக்கேரி கிராமத்திலிருந்து காயல்மேடு கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.