கடலூர் மஞ்சக்குப்பம் பாரதிதாசன் சாலையானது சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது சாலை பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?