கோவை மாநகராட்சி 81-வது வார்டுக்கு உட்பட்ட டி.கே. மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.