குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-02 16:45 GMT
பகண்டை கூட்டு ரோட்டில் இருந்து கள்ளக்குறிச்சி மாமனந்தல் வரை உள்ள சாலையில் பகண்டை கூட்டு ரோட்டில் இருந்து பெரிய பகண்டை கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல இச்சாலையை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் சேதம் அடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்